கிரிக்கெட்

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + Kolkata won the match by 59 runs against Delhi

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய 42வது ஆட்டத்தில் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி மோதியது. இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சாயீத் மைதானத்தில் நடைபெற்றது.


இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் நிதிஷ் ரானா களமிறங்கினர். ஷுப்மன் கில் 9 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், நிதிஷ் ரானா 53 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 81 ரன்கள் குவித்தார்.

இதற்கிடையில் ராகுல் திரிபாதி (13 ரன்கள்), தினேஷ் கார்த்திக்(3 ரன்கள்) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அடுத்ததாக களமிறங்கிய சுனில் நரேன் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி அதிரடி காட்டினார். 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்த சுனில் நரேன் ரபாடா பந்துவீச்சில் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிர்கு 194 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 195 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடத் துவங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரஹானே மற்றும் தவான் களமிறங்கினர். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே ரஹானே எல்.பி.டபில்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து மீண்டும் கம்மின்ஸ் வீசிய 3வது ஓவரில் ஷிகர் தவான்(6 ரன்கள்) பவுல்ட் ஆனார். இதற்கடுத்து ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். வருண் சக்கரவர்த்தி வீசிய 12வது ஓவரில் ரிஷப் பண்ட்(27 ரன்கள்) கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார். அரைசதத்தை நோக்கி முன்னேறிய ஸ்ரேயாஸ் ஐயர்(47 ரன்கள்) வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

இதற்கடுத்து களமிறங்கியவர்களில் ஷிம்ரன் ஹெட்மெயர்(10 ரன்கள்), மார்க்கஸ் ஸ்டோய்னிஸ்(6 ரன்கள்), அக்ஸர் படேல்(9 ரன்கள்) ஆகியோர் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் அணியின் ரன் வேகம் கணிசமாக குறைந்தது. 4 ஓவர்கள் வீசிய கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் கொல்கத்தா அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் புதிதாக 200 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 2 பேர் பலி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 200 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. டெல்லியில் இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்
பெட்ரோல், டீசல் விலை எப்போதும் இல்லாத அளவுக்கு கடந்த சில நாட்களாகவே உயர்ந்து வருகிறது.
3. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா பாதிப்பு
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 128- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 மாவட்டங்களில் மாநாடு; கர்நாடக விவசாயிகள் சங்கம் முடிவு
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 3 மாவட்டங்களில் மாநாடு நடத்த கர்நாடக விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
5. டெல்லியில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 134 பேருக்கு தொற்று உறுதி
டெல்லியில் இன்று மேலும் 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.