தேசிய செய்திகள்

மதத்தின் பெயரைக் கூறி ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களைப் பிரிக்க பாஜக முயற்சி - பரூக் அப்துல்லா பேட்டி + "||" + It's not an anti-national Jamat, our aim is to ensure that the rights of people of J&K and Ladakh are restored Farooq Abdullah

மதத்தின் பெயரைக் கூறி ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களைப் பிரிக்க பாஜக முயற்சி - பரூக் அப்துல்லா பேட்டி

மதத்தின் பெயரைக் கூறி ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களைப் பிரிக்க பாஜக முயற்சி - பரூக் அப்துல்லா பேட்டி
காஷ்மீருக்கான 370-பிரிவை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும், பாஜக கூட்டாட்சிக் கட்டமைப்பை உடைத்துவிட்டது.
ஜம்மு,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தான 370-வது பிரிவை ரத்து செய்ததற்கு எதிராகவும், மீண்டும் 370-வது பிரிவைக் கொண்டுவரக் கோரியும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன.

இந்தக் கட்சியின் தலைவர்கள், பிரதிநிதிகள் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா இல்லத்தில் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினர். ஜம்மு காஷமீருக்கு சிறப்பு அந்தஸ்தை உறுதி செய்யும் குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணித் தலைவராக பரூக் அப்துல்லா தேர்வு செய்யப்பட்டார்.

துணைத் தலைவராக மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தியும், செய்தித் தொடர்பாளராக மக்கள் மாநாட்டுக் கட்சியின் சஜித் அலோனும் தேர்வு செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முகமது தாரிகாமி, குப்தார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக் கூட்டத்துக்குப் பின் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைத் திரும்பப் பெறக் கோரி போராடுகிறோம். பாஜகவுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறோம். ஆனால், தேச விரோதிகள் அல்ல. எங்கள் அமைப்பு பாஜகவுக்கு எதிரானதே தவிர தேசவிரோதமானது அல்ல. 

காஷ்மீருக்கான 370-பிரிவை ரத்து செய்தும், ஜம்மு காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தும், பாஜக கூட்டாட்சிக் கட்டமைப்பை உடைத்துவிட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைத் தகர்க்க முயல்கிறார்கள். தேசத்தைப் பிளக்கவும், கூட்டாட்சி முறையை உடைக்கவும் முயன்றனர். இதைத்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி நாம் பார்த்துக்கொண்டிருந்தோம். 

எங்கள் நோக்கம் ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் இழந்த உரிமைகளைப் பெற வேண்டும் என்பதுதான். அதுதான் எங்கள் போராட்டம். இதைத் தவிர போராட்டம் இல்லை. மதத்தின் பெயரைக் கூறி பாஜக ஜம்மு காஷ்மீர், லடாக் மக்களைப் பிரிக்க பாஜக முயன்று வருகிறது. இந்த முயற்சி வெற்றி பெறாது. இது மதரீதியான போர் அல்ல. எங்களின் அடையாளத்துக்கான போர். அதனால்தான் ஒன்றாக இணைந்திருக்கிறோம்.

இவ்வாறு பரூக் அப்துல்லா தெரிவித்தார்.