தேசிய செய்திகள்

மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி + "||" + Today, 1,257 people confirmed infected by Corona in Mumbai

மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மும்பையில் இன்று 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மும்பை மாநகராட்சி சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கடந்த 24 மணி நேரத்தில், 1,257 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மும்பையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,50,061 ஆக அதிகரித்துள்ளது.


மும்பையில் இன்று ஒரே நாளில் 50 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 10,016 ஆக உயர்ந்துள்ளது. இன்று 898 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,19,152 ஆக அதிகரித்துள்ளது. தற்போது மும்பையில் 19,554 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மும்பை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில் முன்பதிவு நாளை தொடக்கம்
மும்பை- நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6.30 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.35 கோடியாக உயர்ந்துள்ளது.
3. வருகிற 7-ந்தேதி முதல் நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில்
நாகர்கோவில்-மும்பை இடையே சிறப்பு ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. இந்த ரெயிலுக்கான வழித்தடம் மற்றும் கால அட்டவணை நெல்லை பயணிகளுக்கு வசதியாக மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
4. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6 கோடியை தாண்டியது
உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4.15 கோடியாக உயர்ந்துள்ளது.
5. ‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி விலை எவ்வளவு? ரஷியா அறிவிப்பு
‘ஸ்புட்னிக்-வி’ தடுப்பூசி 95 சதவீதம் செயல்திறனை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.