மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு + "||" + IAS throughout Tamil Nadu Change of workplace of officers

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் -  தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

தமிழகம் முழுவதும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

* காஞ்சிபுரம், திருவள்ளூர், பெரம்பலூர், மதுரை, கரூர், தருமபுரி ஆகிய மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

* திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி காஞ்சிபுரம் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

*தருமபுரி ஆட்சியராக இருந்த மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* தருமபுரி ஆட்சியராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கரூர் மாவட்ட ஆட்சியராக இருந்து அன்பழகன், மதுரை மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியராக அரவிந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* மதுரை ஆட்சியராக இருந்த வினய், சேலம் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

* பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தா, திருவாரூர் மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

* செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனர் சங்கர், பதிவு துறை ஐஜியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.