பீகார் சட்டசபை தேர்தல்; ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சி வேட்பாளர் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு + "||" + Bihar Assembly Election; Janata Dal Rashtrawadi Party candidate shot dead
பீகார் சட்டசபை தேர்தல்; ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சி வேட்பாளர் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு
பீகாரில் சுடப்பட்ட சட்டசபை தேர்தலுக்கான ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சியின் வேட்பாளர் உயிரிழந்து விட்டார்.
பாட்னா,
பீகாரில் சட்டசபைக்கான தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான முதற்கட்ட தேர்தல் வருகிற 28ந்தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த நிலையில், ஷியோகர் மாவட்டத்தின் ஹத்சார் கிராமத்தில் ஜனதா தள ராஷ்டிரவாடி கட்சியின் வேட்பாளர் நாராயண் சிங் மர்ம நபர்களால் இன்றிரவு துப்பாக்கிகளால் சுடப்பட்டார்.
இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் அதில் பலனின்றி நாராயண் சிங் இன்றிரவு உயிரிழந்து விட்டார். இந்த தாக்குதலில் தொடர்புடைய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களும் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
பீகாரில் சவால்களை முறியடித்து பா.ஜ.க. கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. தீபாவளிக்கு பின்னர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி ஏற்பார் என ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர் கே.சி.தியாகி தெரிவித்தார்.