உலக செய்திகள்

போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி + "||" + Corona vulnerability confirmed to Polish president

போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

போலந்து அதிபருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
போலந்து நாட்டு அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வார்சா,

போலந்து நாட்டில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு கடந்த மார்ச் மாதம் மத்தியில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  இது தொடர்ந்து அந்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

போலந்தில் இதுவரை மொத்தம் 2,41,946 பேருக்கு பாதிப்புகள் அறியப்பட்டு உள்ளன.  4,351 பேர் உயிரிழந்து உள்ளனர்.

சமீபத்திய உயிரிழப்பு உயர்வால் கடந்த 10ந்தேதி முதல் அந்நாட்டில் முக கவசங்களை அணிவது மீண்டும் பரவலாக கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளது.  நிறுவனங்களில் பணிபுரிவதில் கட்டுப்பாடுகள் விதிப்பு, பெரிய அளவிலான நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் விடுமுறைகளை குடும்பத்துடன் செலவிடுவது ஆகியவற்றை நிறுத்தி வைப்பது போன்ற நடைமுறைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், போலந்து அதிபர் ஆண்டிரெஜ் துதாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது என்று அதிபருக்கான செய்தி தொடர்பு அதிகாரி பிளாஜெஜ் ஸ்பைசால்ஸ்கி தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

எனினும், அதிபர் நலமுடனேயே உள்ளார்.  அவருக்கு தேவையான மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன என்று அவர் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: இந்திய விமானங்களுக்கு 30 நாட்கள் தடை விதித்தது கனடா
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு கனடா அரசு 30 நாட்கள் தடை விதித்துள்ளது.
2. கொரோனா பாதிப்பு: பிரபல இந்தி பட இசையமைப்பாளர் மரணம்
பிரபல இந்தி பட இசையமைப்பாளர் ஷ்ரவன் ரத்தோடு கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து உள்ளார்.
3. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: "ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்" - சுகாதாரத்துறை வட்டாரம் தகவல்
கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் அடுத்த இரு தினங்களில் ஆம்புலன்ஸ் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என சுகாதாரத்துறை வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
4. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மே 2-ந் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை தலைமை தேர்தல் அதிகாரி உறுதி
கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மே 2-ந் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
5. டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24,638- பேருக்கு கொரோனா
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 24, 638- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்ப்பட்டுள்ளது.