உலக செய்திகள்

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடியாக உயர்வு + "||" + World wide Covid 19 case details on oct 25

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 4.29 கோடியாக உயர்வு
ஐரோப்பிய நாடுகளில் தற்போது கொரோனாவின் 2-வது அலை பரவத் தொடங்கியுள்ளது.
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா உச்சம் தொட்டுக் குறைந்தது. தற்போது 2-வது அலை பரவத்தொடங்கியதால், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விழி பிதுங்கி  நிற்கின்றன.  

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை  4 கோடியே 29  லட்சத்து 17 ஆயிரத்து 045 ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 54 ஆயிரத்து 305- ஆக உள்ளது.  தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 16 லட்சத்து 59 ஆயிரத்து 984 ஆக உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா தொற்று உறுதி - மருத்துவமனையில் அனுமதி
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத்திற்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.
2. கேரளாவில் இன்று 6,194 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - 17 பேர் பலி
கேரளாவில் இன்று 6 ஆயிரத்து 194 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ஈரோடு மாவட்டத்தில் வேகமாக பரவும் கொரோனா; ஒரே நாளில் 70 பேருக்கு பாதிப்பு
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 70 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
4. மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 58,993 பேருக்கு கொரோனா - 301 பேர் பலி
மராட்டிய மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 58 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. தமிழகத்தில் இன்று 5,441 பேருக்கு கொரோனா - 23 பேர் பலி
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 441 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபப்ட்டுள்ளது.