தேசிய செய்திகள்

‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார் + "||" + PM Modi to address the nation on Mann Ki Baat at 11am

‘மன் கி பாத்’: பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்

‘மன் கி பாத்’:  பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார்
பிரதமர் நரேந்திர மோடி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 70-வது முறையாக உரையாற்றுகிறார்.
புதுடெல்லி,

கடந்த 2014ஆம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பிரதமர் நரேந்திர மோடி,  மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான ‘மன் கி பாத்’ என்ற இந்த நிகழ்ச்சி, இன்று (25-ம் தேதி)  11 மணிக்கு தொடங்க இருக்கிறது . வானொலியில் மோடி உரையாற்ற உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி. இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் 70-வது முறையாக உரையாற்றுகிறார். தற்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களுடன் உரையாடுகிறார். கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில், பண்டிகை காலம் வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் மோடி வலியுறுத்துவார் எனத்தெரிகிறது. 

அகில இந்திய வானொலி மட்டும் இன்றி தூர்தர்ஷனிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், பிரதமரின் உரையை, நரேந்திர மோடி மொபைல் ஆப் மூலமும் கேட்க முடியும். இன்று காலை 11 மணிக்கு, அவரின் இந்த உரை தொடங்குகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ஒரே நிறுவனம் தயாரிக்கும் தடுப்பூசிக்கு 3 வெவ்வேறு விலைகள் எப்படி இருக்க முடியும் -பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்
ஒரே நிறுவனத்தால் தயாரிக்கப்படும் அதே தடுப்பூசிக்கு 3 வெவ்வேறான விலைகள் எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது என பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.
2. ஆக்சிஜன் வாயுக் கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம்: மனதில் வலியை ஏற்படுத்துகிறது - பிரதமர் மோடி
ஆக்சிஜன் வாயுக் கசிவால் நாசிக்கில் 22 நோயாளிகள் இறந்த சம்பவம் மனதில் வலியை ஏற்படுத்துகிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. பிரதமர் மோடியின் அறிவிப்பிற்க்கு நன்றி தெரிவித்த மராட்டிய முதல்வர்
18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி அளித்ததற்காக பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி தெரிவித்துள்ளார்.
4. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் மோடி ஆலோசனை; புதிய கட்டுப்பாடுகள் விதிக்க திட்டம்
ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று உச்சம் தொட்டு வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த மருத்துவ நிபுணர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினர்.
5. மே 2-ந்தேதி முன்னாள் முதல்-மந்திரி ஆகிவிடுவார், மம்தா பானர்ஜி - பிரதமர் மோடி சொல்கிறார்
மே 2-ந்தேதி, மம்தா பானர்ஜி முன்னாள் முதல்-மந்திரி ஆகிவிடுவார் என்று பிரதமர் மோடி கூறினார்.