உலக செய்திகள்

ஆப்கான் படைகள் தாக்குதல்- அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலி + "||" + Senior Al-Qaeda leader Husam Abd-al-Ra'uf killed in Afghanistan

ஆப்கான் படைகள் தாக்குதல்- அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலி

ஆப்கான் படைகள் தாக்குதல்-  அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலி
ஆப்கானிஸ்தான் அரசு படைகள் நடத்திய தாக்குதலில் அல் கொய்தா அமைப்பின் மூத்த தலைவர் பலியானார்.
காபூல்,

ஆப்கான் சிறப்புப் படைப்பிரிவு நடத்திய தாக்குதலில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் மூத்த தலைவராக அறியப்படும் அபு முஷின் அல் மஸ்ரி கொல்லப்பட்டார். அமெரிக்காவில் தேடப்படும் நபராக அறியப்பட்ட இவர் உயிரிழந்ததை ஆப்கானிஸ்தானின் உளவு அமைப்பும் உறுதி செய்தது. 

அல்கொய்தா அமைப்பின் 2-வது கட்ட தலைவரான அபு முஷின் அல் மஸ்ரி காஸ்னி மாகாணத்தின் மத்திய பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தாக்குதல் எப்போது நடத்தப்பட்டது, எப்படி நடத்தப்பட்டது என்ற எந்த தகவலையும் ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவிக்கவில்லை. 

ஹுசம் ஏபிடி அல் ராஃப் என்றும் அழைக்கப்படும் அல் மஸ்ரி, அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வு அமைப்பால் அதிகம் தேடப்படும் நபர்களில் ஒருவராகக் கடந்த 2018- ஆம் ஆண்டு பட்டியலில் இணைக்கப்பட்டார். அமெரிக்கர்களைக் கொல்ல பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக இவர் மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலீபான்களுக்கும் அரசுக்கும் இடையே கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அல்கொய்தா  அமைப்பின் மூத்த தலைவர் அரசு படையினரால் கொல்லப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தான் போரில் வென்றது, நாங்கள்தான்: தலீபான்கள்
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்திய அல்கொய்தா பயங்கரவாதிகளுக்கு ஆப்கானிஸ்தான் தலீபான்கள் தஞ்சம் அளித்தனர்.
2. ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போருக்கு ஒரு பொறுப்பான முடிவை கொண்டு வருவதில் ஜோ பைடன் உறுதியாக உள்ளார் - வெள்ளை மாளிகை
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப் போருக்கு ஒரு பொறுப்பான முடிவை கொண்டு வருவதில் ஜோ பைடன் உறுதியாக உள்ளார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
3. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதலில் 10 போலீசார் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் ஹெல்மாண்டில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் கொல்லப்பட்டனர்.
4. ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல்: 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 27 தலீபான் பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
5. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தால் ஜோ பைடன் ஏற்றுக்கொள்ளமாட்டார் - வெள்ளை மாளிகை
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்தால் ஜோ பைடன் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.