சென்னையில் நேற்று மனு தர்ம நூலை எரித்து போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன நூலை தடை செய்ய வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. தலைமை தாங்கினார். நூலை தடை செய்யவும், வழக்கு பதிவு செய்ததற்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதற்கிடையே, சென்னையில் நேற்று போராட்டம் நடத்திய திருமாவளவன் உள்பட 250 பேர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு உத்தரவு மீறல், தொற்று நோய் பரவல் சட்டம் உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தலைவாசல் அருகே பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில், சிறுமியை தொடர்ந்து டேங்கர் லாரி டிரைவரின் மனைவியும் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து டிரைவர் மீது இரட்டை கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விளாத்திகுளத்தில் கட்சி கொடியேற்றுவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அ.தி.மு.க.-தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் உள்பட 602 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.