இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,129- பேருக்கு கொரோனா + "||" + With 50,129 new #COVID19 infections, India's total cases surge to 78,64,811. With 578 new deaths, toll mounts to 1,18,534.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,129- பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்து 129-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை சுமார் 50 ஆயிரம் என்ற அளவிலேயே நீடிக்கிறது. இதைப்போல பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.
அதேநேரம் கொரோனாவில் இருந்து குணமடையும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 62 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
அதேபோல், 50 ஆயிரத்து 129- பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78 லட்சத்து 64 ஆயிரத்து 811-ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 578- பேர் உயிரிழந்தனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 18 ஆயிரத்து 534- ஆக உள்ளது.
இந்தியாவில் இதுவரை 10 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 469 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 11 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.