தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னை உட்பட வட தமிழக மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறிய சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்,
தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு உள்ளது. 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்” எனவும் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க தொடங்கி உள்ளது. நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கனமழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்கு மத்திய குழு 4-ந் தேதி (நாளை) தமிழகம் வருகிறது. இரண்டு நாட்கள் தங்கி இருந்து சேதத்தை மதிப்பிடுகின்றனர்.