"கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை"- டிரம்ப் மீது முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம் + "||" + Trump's Coronavirus Response A "Screw Up", Says Barack Obama
"கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை"- டிரம்ப் மீது முன்னாள் அதிபர் ஒபாமா விமர்சனம்
ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கு ஆதரவாக முன்னாள் அதிபர் ஒபாமா பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வாஷிங்டன்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3-ந் தேதி நடக்கிறது. அதிபர் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரத்தில் தற்போதைய அதிபர் டிரம்ப், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பைடன் ஈடுபட்டுள்ளனர்.
புளோரிடாவில் ஜோபிடனுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, மியாமியில் தொலைக்காட்சி பேட்டியிலிருந்து பாதியில் வெளியேறிய அதிபர் டிரம்பை விமர்சனம் செய்தனர்.
உங்களுடைய 2-வது ஆட்சியில் எதற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள் என்ற கேள்விக்கு கூட பதில் கூற முடியாமல் சென்றவரிடம் இனியும் ஆட்சியை செல்லவிடமாட்டோம் எனக் ஒபாமா கூறியுள்ளார். மேலும், டிரம்பிடம் கொரோனாவை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை எனவும் விமர்சனம் செய்தனர்.
முன்னதாக கரோலினா மாகாணத்தில் நடந்த பிரசாரத்தில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த சில மாதங்களாக அமெரிக்க ஊடகங்களில் கொரோனா என்ற சொல்லை மக்கள் அதிகளவு கேட்டு உள்ளதாகவும், அதிபர் தேர்தலுக்கு பிந்தைய நாளான நவம்பர் 4-ந் தேதி முதல் யாரும் அந்த சொல்லை கேட்கும் நிலை வராது என தெரிவித்து உள்ளார்.
கொரோனா நிவாரணத்துக்காக 900 பில்லியன் டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ 66 லட்சம் கோடி) ஒதுக்கீடு செய்யும் வகையில், கொரோனா நிவாரண மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அண்மையில் நிறைவேறியது.