கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் + "||" + RCB have won the toss and they will bat first against CSK

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்

ஐ.பி.எல். கிரிக்கெட்: டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.
துபாய்,

முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் 8-ல் தோற்று முதல்முறையாக அடுத்த சுற்று வாய்ப்பை இழந்திருக்கிறது. இனி இழப்பதற்கு எதுவும் இல்லை என்பதால் நெருக்கடி இன்றி விளையாடுவார்கள். ஆனால் புள்ளிபட்டியலில் கடைசி என்ற பரிதாப நிலையை மாற்ற முயற்சிப்பார்கள். 

மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 114 ரன்னில் சுருண்டதும், குறிப்பாக பேட்டிங்குக்கு உகந்த சார்ஜா ஆடுகளத்தில் பவர்-பிளேக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததையும் சென்னை ரசிகர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. தொடர்ச்சியான சறுக்கலால் நிலைகுலைந்து திகைத்து போய் நிற்கும் சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு ஆறுதல் வெற்றி பெறுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் சென்னை அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் செய்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 44-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

சி.எஸ்.கே. அணி இதுவரை 11 ஆட்டங்களில் 3 வெற்றிகளை மட்டும் பதிவு செய்து பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டது. 

பிளே-ஆஃப் வாய்ப்பு கைமீறி சென்றுவிட்டதால், எஞ்சிய ஆட்டங்களில் இளம் வீரா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணியில் சாண்ட்னர் மற்றும் மோனு குமார் சேர்க்கப்பட்டுள்ளனர்.