தேசிய செய்திகள்

லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் சிறையிலடைக்கப்படுவார் - சிராக் பாஸ்வான் + "||" + Nitish Kumar will be behind bars if LJP comes to power: Chirag Paswan

லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் சிறையிலடைக்கப்படுவார் - சிராக் பாஸ்வான்

லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் சிறையிலடைக்கப்படுவார் -  சிராக் பாஸ்வான்
பீகார் தேர்தலில் தங்களின் லோக் ஜனசக்தி கட்சி ஆட்சிக்கு வந்தால் தற்போதைய முதல்-மந்திரி நிதிஷ் குமார் சிறையிலடைக்கப்படுவார் என்று சிராக் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
பாட்னா,

கொரோனா தொற்றுநோய் கால கட்டத்தில் இந்தியாவில் நடைபெறும் முதல் தேர்தல் பீகார் சட்டமன்றத் தேர்தல்கள் ஆகும். அக்டோபர் 28 முதல் நவம்பர் 7 வரை நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) பிரதான எதிர்க்கட்சியான மகாகத்பந்தனுக்கும் (எம்ஜிபி) நேரடிப் போட்டி ஏற்பட்டு உள்ளது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில்  நிதிஷ்குமார் தலைமையிலான அணி மீண்டும் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளன. நிதிஷ்குமார் செல்வாக்கு சரிந்திருப்பதாகவும், அதே நேரத்தில் பா.ஜனாதாவுடன் கூட்டணி அமைத்திருப்பதால் அவருக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், புக்சாரில் தும்ரவானில் பிரச்சாரம் மேற்கொண்ட சிராக் பாஸ்வான் பேசியதாவது:

பீகாரில் மதுபானத் தடை தோல்வியடைந்து விட்டது. கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்கப்படுகின்றன, கள்ளச்சாராயம் விற்கப்படுகிறது, நிதிஷ் குமாருகு இதன் மூலம் நல்ல 'வருவாய்' லஞ்சமாகக் கிட்டுகிறது.

நிதிஷ் இல்லாத அரசை உருவாக்க விரும்புகிறோம். பீகார் முதன்மை மாநிலமாக வர வேண்டுமெனில் லோக் ஜனசக்தி வேட்பாளருக்கு வாக்களியுங்கள்.

லோக்ஜனசக்தி வேட்பாளர் நிற்காத இடத்தில் பாஜகவுக்கு வாக்களியுங்கள், வரும் அரசு நிதிஷ் இல்லாத அரசு, என்று பேசினார்.

நிதிஷை கடுமையாக எதிர்க்கும் இவர் மோடியை கடுமையாக ஆதரிக்கிறார், மோடியின் ஹனுமான் நானே என்று கூறிக்கொள்வதில் பெருமையடைகிறார் சிராக் பாஸ்வான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லி எய்ம்சில் அனுமதிக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய நிதிஷ் குமார் வாழ்த்து
லாலு பிரசாத் யாதவ், உடல்நல குறைவு காரணமாக ராஞ்சியில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டா
2. போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது- நிதிஷ்குமார்
டெல்லியில் போராடும் விவசாயிகளின் பயத்தை மத்திய அரசு போக்க வேண்டும் என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
3. பீகாரில் நிதிஷ் குமாருடன் 13 மந்திரிகள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்
பீகாரில் நிதிஷ் குமார் இன்று முதல் மந்திரியாக பதவியேற்க உள்ள நிலையில், அவரது மந்திரி சபையில் 2 துணை முதல் மந்திரிகள் உள்பட 14 பேர் இடம் பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
4. பீகார் துணை முதல் மந்திரி பொறுப்பு : சுஷில் குமார் மோடிக்கு பதில் தர்கிஷோர் பிரசாத்?
பீகார் துணை முதல் மந்திரியாக தர்கிஷோர் பிரசாத் பதவியேற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
5. பீகார் முதல் மந்திரியாக நாளை பதவியேற்கிறார் நிதிஷ் குமார்
பீகார் மாநில முதல் மந்திரியாக தொடர்ந்து 4-வது முறையாக நிதிஷ் குமார் நாளை பதவியேற்க உள்ளார்.