மாநில செய்திகள்

2-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona affects 2,869 new people in Tamil Nadu

2-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு

2-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த பாதிப்பு: தமிழகத்தில் புதிதாக 2,869 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் கொரோனா தொற்றிலிருந்து மேலும் 4,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 6.67 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று 2 ஆயிரத்து 869 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி உள்ளது.
தமிழகத்தில் 121 நாட்களுக்கு பின் தற்போது 2-வது நாளாக 3 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.

சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 4 ஆயிரத்து 19 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 31 பேர் உயிரிழந்தனர். அரசு மருத்துவமனைகளில் 17 பேர், தனியார் மருத்துவமனைகளில் 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 50 வயதுக்கு உட்பட்ட 2 பேர் உயிரிழந்தனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் வேறு நோய் பாதிப்பு இல்லாத ஒருவர் உயிரிழந்தார்.

சென்னையில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3,592 பேர் உயிரிழந்தனர்.  தமிழகத்தில் கொரொனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,924 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த மேலும் 4,019 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு 30,006 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 6,63,456-ல் இருந்து 6,67,474 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 79,350 பேருக்கும், இதுவரை 92,57,449 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மேலும் 80,690 மாதிரிகளும், இதுவரை 95,17,507 மாதிரிகளும் பரிசோதனை செய்யபப்ட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 1,94,873லிருந்து 1,95,672 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் 7-வது நாளாக ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 7,06,136லிருந்து 7,09,005 ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.