தேசிய செய்திகள்

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா தொற்று + "||" + RBI Governor Shaktikanta Das tests positive for COVID19, says he will continue to work from isolation

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா தொற்று

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா தொற்று
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

சீனாவில் உருவான கொடிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை பாடாய் படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவிலும் ருத்ரதாண்டவமாடி வரும் கொரோனா, பாரபட்சமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. 
பாமரன் முதல் உயர் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகள் வரை அனைவரையும் கொரோனா தாக்கி வருகிறது. 

கொரோனா, பொதுமக்களை மட்டுமல்லாது, முக்கிய பிரபலங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்த வகையில், மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள், தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அவர் டுவிட்டர் பதிவில் உறுதிபடுத்தியுள்ளார். இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இருப்பினும், தான் நன்றாக இருப்பதாகவும், தொடர்ந்து பணியாற்றப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சமீபகாலங்களில் என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் ரிசர்வ் வங்கியில் பணிகள் வழக்கம்போல் பணிகள் நடைபெறும் எனக் குறிப்பிட்ட அவர் கான்பிரன்ஸிங், தொலைபேசி மூலம் அனைத்து நாட்களிலும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.