உலக செய்திகள்

அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஓராண்டு நிறைவு: ஈராக்கில் ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்ட மக்கள் + "||" + Thousands rally in Iraq to mark one year of protests

அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஓராண்டு நிறைவு: ஈராக்கில் ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்ட மக்கள்

அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஓராண்டு நிறைவு: ஈராக்கில் ஆயிரக்கணக்கில் வீதிகளில் திரண்ட மக்கள்
ஈராக்கில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கில் மக்கள் வீதிகளில் திரண்டனர்.
பாக்தாத்,

ஈராக்கில் அரசின் நிர்வாக சுணக்கத்தால் அந்நாட்டு பொருளாதார நிலை சரிவு கண்டது. ஊழல், வேலையில்லா திண்டாட்டம் ஆகியவை பெருகின இதனை முன்வைத்து திரளான மக்கள் போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில் ( 2019-ம்ஆண்டு அக்டோபர் ) 319 பேர் இறந்தனர். 15,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என  ஈராக் நாடாளுமன்றத்தின் மனித உரிமை ஆணையத்தின் தலைவர் கூறினார்.

இந்நிலையில்,  ஈராக்கில் அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் ஓராண்டு நிறைவு தினத்தையொட்டி, ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் திரண்டனர். 

2019ம் அக்டோபரில், நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் வேலையில்லா திண்டாடத்திற்கு எதிராக தொடங்கிய போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தில் 500க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதன் ஓராண்டு நிறைவை குறிக்கும் விதமாக, பாக்தாத் மற்றும் பாஸ்ரா நகரங்களில் கூடிய மக்கள், போராட்டத்தின்போது கொல்லப்பட்டவர்களின் உருவப்படங்கள் பொறித்த கொடிகளை ஏந்தியவாறு, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.