உலக செய்திகள்

இந்தியா குறித்து டிரம்ப் குற்றச்சாட்டு: கமலா ஹாரிஸும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம் - ஜோ பைடன் + "||" + US elections: Biden slams Trump for calling India 'filthy'

இந்தியா குறித்து டிரம்ப் குற்றச்சாட்டு: கமலா ஹாரிஸும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம் - ஜோ பைடன்

இந்தியா குறித்து டிரம்ப் குற்றச்சாட்டு: கமலா ஹாரிஸும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம் - ஜோ பைடன்
கமலா ஹாரிஸும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம் என்று ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் கூறியுள்ளார்.
வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 3-ந் தேதி நடக்கிறது. அந்த நாட்டு சட்டப்படி முன்கூட்டியே ஓட்டு போட அனுமதி உண்டு.

அந்த வகையில் புளோரிடா மாகாணம், வெஸ்ட் பாம் பீச்சில் உள்ள நூலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு டிரம்ப் நேற்று காலை சென்று ஓட்டு போட்டார்.

அப்போது அந்த வாக்குச்சாவடிக்கு வெளியே டிரம்ப் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கொடிகளுடனும், பதாகைகளுடனும் கூடி நின்று இந்த தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்று இன்னும் 4 வருடங்கள் ஜனாதிபதி பதவி வகிக்க வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை வெளிக்காட்டும் வகையில் “இன்னும் 4 ஆண்டுகள்” என்று உற்சாகமாக கோஷமிட்டனர்.

முக கவசம் அணிந்து வந்து ஓட்டு போட்ட டிரம்ப், நிருபர்களை நோக்கி வருகிறபோது அதை அகற்றி விட்டார். நிருபர்களிடம் பேசுகையில் வேடிக்கையாக, “நான் டிரம்ப் என்ற பையனுக்கு ஓட்டு போட்டேன்” என கூறினார்.

குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோ பைடன் இன்னும் ஓட்டு போடவில்லை. அவர் டெலவாரேயில் 3-ந் தேதி ஓட்டு போடுவார் என தகவல்கள் கூறுகின்றன.

இந்நிலையில், இரு வேட்பாளர்களுக்கும் இடையேயான இறுதி நேரடி விவாதம் இரு தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. அப்போது, பருவநிலை மாற்றம் பிரச்சினையில் டொனால்ட் ட்ரம்பின் நிலைப்பாடும், நடவடிக்கைகளும் பற்றி ஜோ பைடன் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளித்து பேசிய டொனால்ட் டிரம்ப், சீனா, இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் காற்று மாசுபாடு காரணமாக அசிங்கமாக இருக்கிறது என்றார். இதையடுத்து, டொனால்ட் டிரம்ப்க்கு எதிரான விமர்சனங்கள் கிளம்பின. 

இந்தியாவுக்கு வருகை புரிந்த போது அதன் அசிங்கம் அவருக்கு தெரியவில்லையா என்ற கண்டனக் குரல்கள் எழுந்தன.

இந்த நிலையில், நமது நண்பர்களை பற்றி நீங்கள் இப்படி பேசக் கூடாது. பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய சவால்களை உங்களை போன்று தீர்க்கக் கூடாது என்று டொனால் டிரம்ப்பை ஜோ பைடன் விமர்சித்துள்ளார். கமலா ஹாரிஸும் நானும் நட்பு நாடுகளுடனான உறவை ஆழமாக மதிக்கிறோம். வெளியுறவுக் கொள்கையில் மரியாதை செலுத்துவோம் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முக கவசம் அணியாமல் பொதுவெளியில் தோன்றிய ஜோ பைடன்
முககவசம் அணிவதை கட்டாயமாக்கி உத்தரவு பிறப்பித்த சில மணி நேரத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் பொதுவெளியில் முகக் கவசம் அணியாமல் தோன்றி சர்ச்சையில் சிக்கினார்.
2. அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்! - ஜோ பைடன் டுவீட்
அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக ஜோ பைடன் இன்று இரவு 10 மணிக்கு (இந்திய நேரப்படி) பதவி ஏற்கிறார்.
3. ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் பதவியேற்பை வரவேற்று கோலமிட்ட அமெரிக்கர்கள்.
4. ஜோ பைடன், கமலா ஹாரிஷ் பதவி ஏற்பு விழாவில் தமிழரின் பிரமாண்ட கோலங்கள் காட்சிப்படுத்தப்படும் என தகவல்
ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவின் துவக்கத்தில் ஒளிபரப்பபடும் காணொலி காட்சியில், இந்திய வம்சாவளியினர் உருவாக்கி உள்ள பிரமாண்ட கோலங்கள், காட்சிப்படுத்தப்பட உள்ளன.
5. பைசர் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்
மூன்று வாரங்களுக்கு முன்பாக பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன், தடுப்பு மருந்தின் 2-வது டோஸையும் செலுத்திக்கொண்டார்.