கிரிக்கெட்

ஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி + "||" + IPL Competition; Rajasthan Royals won by 8 wickets

ஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். போட்டி; ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அபுதாபி,

ஐ.பி.எல். போட்டியின் இன்றைய 45வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின.  இதில், டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

இதன்படி விளையாடிய அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் அடித்து ஆடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.  சூரிய குமார் (40), சவுரப் திவாரி (34) ரன்கள் எடுத்து அணிக்கு வலு சேர்த்து வெளியேறினார்கள்.

ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் எடுத்தது அணி 195 என்ற அதிகபட்ச ஸ்கோரை எடுக்க உதவியது.  20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை எடுத்திருந்தது.  இதனால் 196 என்ற வெற்றி இலக்கை நோக்கி ராயல்ஸ் அணி விளையாடியது.

ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான ராபின் உத்தப்பா (13) ரன்களில் வெளியேறினார்.  ஆனால், அவருடன் விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான பென் ஸ்டோக்ஸ் 107 (60 பந்துகள் 14 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  கேப்டன் ஸ்மித் (11) ரன்களில் ஆட்டமிழந்து உள்ளார்.

இதேபோன்று ஸ்டோக்சுடன் சேர்ந்து விளையாடிய சஞ்சு சாம்சன் 54 (31 பந்துகள் 4 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) ரன்கள் எடுத்து உள்ளார்.

ராயல்ஸ் அணி 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை எடுத்தது.  இதனால் அந்த அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.பி.எல். போட்டி: பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
ஐ.பி.எல். போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.