தேசிய செய்திகள்

தெலுங்கானாவில் கனமழை; வீடு இடிந்ததில் 5 பேர் பலி + "||" + Heavy rains in Telangana; 5 killed in house collapse

தெலுங்கானாவில் கனமழை; வீடு இடிந்ததில் 5 பேர் பலி

தெலுங்கானாவில் கனமழை; வீடு இடிந்ததில் 5 பேர் பலி
தெலுங்கானாவில் கனமழைக்கு வீடு இடிந்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர்.
ஐதராபாத்,

தெலுங்கானாவின் வனபார்த்தி பகுதியில் நரசிம்மையா என்பவரது வீட்டுக்கு 2 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வந்துள்ளனர்.  அவர்களில் 9 பேர் அவரது வீட்டிற்கு உள்ளேயும், ஒருவர் வீட்டுக்கு வெளியேயும் இரவில் படுத்து உறங்கியுள்ளனர்.

தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.  இதனால், நகரின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.  இந்நிலையில், இன்று அந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

இதில், 5 பேர் பலியானார்கள்.  4 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்களில் 2 பேரை கிராமவாசிகள் உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.  இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கடந்த 6 நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி; பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியல்
கடந்த 6 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக வெள்ளத்தில் மிதக்கிறது தூத்துக்குடி. பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
2. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
3. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்
வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 7 மாவட்டங்களில் நாளை கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
4. தமிழகத்தில்13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5. திருவாரூரில் 3-வது நாளாக விடிய, விடிய கனமழை; 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின; விவசாயிகள் கவலை
திருவாரூரில் 3-வது நாளாக விடிய, விடிய கனமழை பெய்தது. இதில் 25 ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.