உலக செய்திகள்

அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Corona exposure to 5 people, including a political adviser to the US Vice President

அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க துணை ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்சின் அரசியல் ஆலோசகர் உள்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
வாஷிங்டன்,

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வருகிற நவம்பரில் நடைபெற உள்ளது.  இதற்காக தீவிர பிரசாரத்தில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.  அமெரிக்கா உலக அளவில் அதிக கொரோனா பாதிப்புகளை கொண்டுள்ளது.

அமெரிக்க துணை ஜனாதிபதியாக மைக் பென்ஸ் இருந்து வருகிறார்.  இவரது மூத்த அரசியல் ஆலோசகராக மார்ட்டி ஆப்ஸ்ட் என்பவர் இருந்து வருகிறார்.  அரசு அதிகாரி அல்லாத இவர் உள்பட பென்சுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என அவரது அலுவலகம் தெரிவித்து உள்ளது.  வருகிற நாட்களில் இந்த எண்ணிக்கை உயர கூடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு; முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும்: பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைந்து திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
2. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா; டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
3. கொரோனா பாதிப்பு; வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதியுதவி அறிவிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு ஏற்படும் வழக்கறிஞர்களுக்கு டெல்லி பார் கவுன்சில் நிதியுதவி அறிவித்து உள்ளது.
4. கொரோனா பாதிப்பு உயர்வு; பிரதமர் மோடி முன்னணி டாக்டர்களுடன் ஆலோசனை
கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு பிரதமர் மோடி நாடு முழுவதும் உள்ள முன்னணி டாக்டர்களுடன் இன்று மாலை ஆலோசனை மேற்கொள்கிறார்.
5. கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு அவசர ஆலோசனை
நாட்டில் கொரோனா பாதிப்பு மிக கடுமையாக அதிகரித்துள்ளநிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.