உலக செய்திகள்

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் ஆணவ பேச்சு + "||" + White House admission on pandemic overshadows Trumps last push for reelection

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் ஆணவ பேச்சு

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை டிரம்பின் உதவியாளர்களின் தலைவர் ஆணவ பேச்சு
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை, இது சாதாரண காய்ச்சல்போல் தான் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் கூறி உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் இதுவரை 86 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மட்டுமே தற்போது வரை தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். ஏறத்தாழ 50 லட்சம் பேர் (49,87,647) தற்போது வரை கொரோனா தொற்றுடன் போராடி வருகின்றனர். இதுவரை 2,25,227 பேர் நாடு முழுவதும் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிக எண்ணிக்கையை அமெரிக்காதான் கொண்டுள்ளது. அதேபோது உயிரிழப்பு விகிதத்திலும் ஐந்தில் ஒரு பங்கை அமெரிக்கா கொண்டுள்ளது. 

இந்நிலையில் தொற்று பரவலை அதிபர் தடுக்க தவறிவிட்டார் என ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் வேட்பாளராக போட்டியிடும் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்திருந்தார். இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உதவியாளர்களின் தலைவரான மார்க் மெடோஸ் செய்தி நிறுவனங்கள் கேள்வியெழுப்பியபோது, நாங்கள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தப்போவதில்லை என்றும், ஏனெனில் இது ஒரு சாதாரண காய்ச்சல் போல ஒன்றுதான் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் சிகிச்சைகள் மற்றும் தடுப்பூசிகள் போன்றவை அதனை குறைக்க முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று வாதிட்டார்.

வரும் நவம்பர் மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மெடோஸ்ஸின் இந்த கருத்து மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் - ரஷிய விஞ்ஞானி எச்சரிக்கை
தாமாகவே இருமுறை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி ஆய்வு மேற்கொண்ட ரஷிய விஞ்ஞானி ஒருவர், தடுப்பூசிகள் பலன் தராமல் போக வாய்ப்புகள் அதிகம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது -அமெரிக்காவின் உயர்மட்ட குழு சொல்கிறது
20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்த கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சீனா அரசால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என அமெரிக்காவின் உயர்மட்ட குழு ஒன்று தெரிவித்து உள்ளது.
3. பைசர் தடுப்பூசிக்கு பிரிட்டன் ஒப்புதல்: அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வருகிறது
பிரிட்டன் அரசு ஒப்புதலை தொடர்ந்து அந்நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.
4. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,404 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
5. கொரோனா மரண பயம் : சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து போட்டுக்கொண்ட வட கொரிய தலைவர்
கொரோனா பரவலால் மரண பயம் காரணமாக சீனாவில் இருந்து ரகசியமாக தடுப்பூசி வரவழைத்து வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் போட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.