உலக செய்திகள்

சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைக்க தற்போதைய நிலையில் தேவையில்லை ரஷிய அதிபர் புதின் + "||" + China, Russia see 'no need for military alliance' amid high-level cooperation

சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைக்க தற்போதைய நிலையில் தேவையில்லை ரஷிய அதிபர் புதின்

சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைக்க தற்போதைய நிலையில் தேவையில்லை ரஷிய அதிபர் புதின்
சீனா மற்றும் ரஷியா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது, இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் இருப்பதாக ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
மாஸ்கோ

அமெரிக்காவுடனான சீனா மற்றும் ரஷியாவின் உறவுகள் பதற்றமாக இருக்கும் நிலையில் சீனாவும் ரஷியாவும் அதிக நெருக்கம் காட்டி வருகின்றன.அணு ஆயுதங்கள் வைத்திருப்பது தொடர்பாக, அமெரிக்காவுடனான ரஷியாவின் ஒப்பந்தம் அடுத்தாண்டு முடிய உள்ளது.

இதை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், குறித்த ஒப்பந்தத்தை நீட்டிப்பது தொடர்பாக, இரு நாடுகளும் பேசி வருகின்றன.இந்த நிலையில், பல நாடுகளைச் சேர்ந்த, வெளியுறவுத்துறை கொள்கை நிபுணர்களுடன், காணொளி முறையில் ரஷிய அதிபர் புதின் கலந்துரையாடினார்.

அப்போது பேசிய அவர், சீனா மற்றும் ரஷியா இடையே ராணுவ ரீதியிலான உறவு உள்ளது. சீன ராணுவத்தின் வலிமையை அதிகரிக்க, அது உதவி உள்ளது.அதே நேரத்தில், சீனாவுடன் ராணுவக் கூட்டணி வைப்பதற்கு, தற்போதைய நிலையில் தேவையில்லை. ஆனால், எதிர்காலத்தில் கூட்டணி ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகம் உள்ளது.அணு ஆயுதம் தொடர்பாக, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்புகிறோம். ஆனால், அதில் இறுதி முடிவை அமெரிக்கா தான் எடுக்க வேண்டும்.

ரஷிய அதிபரின் இந்த திடீர் அறிவிப்பு, சர்வதேச அரசியல் அரங்கில் பரபரப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு -இறப்புகளில் முழுமையான தகவலை மூடிமறைத்த சீனா
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பில் சீனா முழுமையான தகவலை வெளியிடாமல் மூடிமறைத்துள்ள சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
2. 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா
தள்ளுபடி விலையை இந்தியாவில் வழங்குவதால் சீனா 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய தொழில்துறை அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளனர்.
3. சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை
உலகில் முதன் முதலாக தொற்று பாதிப்பு வெளிப்பட்ட சீனாவில், இதுவரை 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பூட்டானிய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவின் டோக்லாமிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா- செயற்கைகோள் படங்கள்
சீனா பூட்டானிய எல்லைக்குள் டோக்லாம் பீடபூமியின் கிழக்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் ஊடுருவி சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையைக் கட்டியுள்ளது என உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகிறது.
5. கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.