மாநில செய்திகள்

பெரம்பலூரில் டைனோசர்கள் முட்டைகளும்...? மீம்ஸ் மாம்ஸ்களும்... + "||" + 'Dinosaur' eggs in TN turn out to be fossils but lead to some egg-cellent memes

பெரம்பலூரில் டைனோசர்கள் முட்டைகளும்...? மீம்ஸ் மாம்ஸ்களும்...

பெரம்பலூரில் டைனோசர்கள் முட்டைகளும்...? மீம்ஸ் மாம்ஸ்களும்...
மீம் கிரியேட்டர்கள் கையில் சிக்கிய டைனோசர் செய்தி இணையத்தில் மீம்கள் குவிந்து வைரலாகி வருகின்றன.
சென்னை

பெரம்பலூர் அருகே கிடைத்த உருண்டை போன்ற  முட்டைகள்  டைனோசர்கள் முட்டைகளாக இருக்கலாம் என செய்தி வெளியானலும் வெளியானது. இதற்காகவே காத்திருந்த மீம் கிரியேட்டர்கள் மீம் களை உருவாக்கி கலக்கி வருகிறார்கள். அவர்கள் கையில் டைனோசர் சிக்கினால் சும்மா விடுவார்களா? சமூக வலைதளத்தில் ரசிக்கும் வகையிலான டைனோசர் மீம்களே அதிகம் வலம் வருகின்றன. 

என்ன விளக்கம் கொடுக்கப்பட்டாலும், டைனோசரையும், பெரம்பலூரையும் மீம் கிரியேட்டர்கள் விடுவதாக இல்லை. பெரம்பலூரை ஜுராசிக் வேர்ல்டு அளவுக்கு கலாய்க்க ஆரம்பித்து விட்டார்கள். கிடாவெட்டு முதல் ஜல்லிக்கட்டு வரை பெரம்பலூர் மக்கள் டைனோசருக்கே முன்னுரிமை கொடுப்பதை போன்ற மீம்கள் வெளியாகியுள்ளன. ஆடு, மாடு இருக்கும் அனைத்து இடங்களிலும் டைனோசரே இடம்பிடித்துள்ளது.

பேருந்து செல்லும் போது, இடையில் டைனோசர் ஓடுவது உள்ளிட்ட வீடியோக்களுக்கும் பஞ்சமில்லை. பெரம்பலூர் மக்கள் சாதாரணமாக டைனோசருடன் வலம் வருவது போல் இந்த மீம்கள் உருவாக்கப்படுகின்றன. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டைனோசர் டெம்பிலேட்-களுக்கும் அதிக மவுசு. அவர்கள் அதிகம் கூகுளில் தேடுவதும் இதுவாகதான் இருக்கும். பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் நேரத்தில், இதுபோன்ற மீம்கள் மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது என்பதில் எந்த சந்தேகமுமில்லை.View this post on Instagram

#perambalur

A post shared by Adhi Mc (@chin_chan_mems) on

View this post on Instagram

#perambalur

A post shared by Adhi Mc (@chin_chan_mems) on


தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர் மாவட்டத்தில் தண்ணீரில் சாய்ந்து முளைத்த நெற்பயிர்கள்: வயல்களை ஆய்வு ெசய்து நிவாரணம் வழங்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
தண்ணீாில் சாய்ந்து நெற்பயிர்கள் முளைத்துள்ள வயல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
2. பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
3. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு; கிறிஸ்தவ தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி கோவில்கள் சிறப்பு வழிபாடும், கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்றது.
4. பெரம்பலூர் அருகே பரிதாபம்: 3 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை; கணவர் கைது
பெரம்பலூர் அருகே 3 குழந்தைகளின் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் கணவரை போலீசார் கைது செய்தனர்.
5. பெரம்பலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் அம்மை நோயால் மாடுகள் சாவு; கால்நடை வளர்ப்போர் கவலை
பெரம்பலூர் மாவட்டத்தில் வேகமாக பரவும் அம்மை நோயால் மாடுகள் இறப்பதால், கால்நடை வளர்ப்போர் கவலை அடைந்துள்ளனர்.