தேசிய செய்திகள்

மராட்டியத்தில் புதிதாக 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு + "||" + Maharashtra Coronavirus: 6,738 new cases; 8,430 recover, 91 die

மராட்டியத்தில் புதிதாக 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு

மராட்டியத்தில் புதிதாக 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு
மராட்டியத்தில் புதிதாக இன்று மேலும் 6,738 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் இன்று மாநிலத்தில் புதிதாக 6,738 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 60 ஆயிரத்து 766 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 926 பேர் குணமடைந்து உள்ளனர். இன்று மட்டும் 8 ஆயிரத்து 430 பேர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 29 ஆயிரத்து 746 பேர் வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 91 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மராட்டியத்தில் இதுவரை தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 554 ஆக உயர்ந்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 5,600 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.95 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
2. மராட்டியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,930 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.91 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
3. மராட்டியத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு: புதிதாக 5,544 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.80 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
4. மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 5,965 பேருக்கு தொற்று உறுதி
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16.76 லட்சமாக உயர்வடைந்துள்ளது.
5. மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்தது
மராட்டியத்தில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை கடந்துள்ளது.