உலக செய்திகள்

21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம் + "||" + Scientists discover what may be the largest flying birds in history

21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்

21 அடி வரை இறக்கைகள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள்- விஞ்ஞானிகள் ஆச்சரியம்
21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட வரலாற்றில் மிகப்பெரிய பறக்கும் பறவைகள் எது என்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
புதுடெல்லி

6 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் டைனோசர்கள் அழிந்துபோன உடனேயே, 21 அடி வரை இறக்கைகள் மற்றும் ஹாக்ஸா போன்ற பற்கள் கொண்ட பிரம்மாண்டமான பறவைகள் பூமியின் தெற்கு பெருங்கடல்களில் சுற்றித் திரிந்தன என்று கலிபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இந்த வார தொடக்கத்தில் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸ் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், பல்லுயிரியலாளர்கள் குழு வரலாற்றில் மிகப் பெரிய பறவை இனங்கள் எதுவாக இருந்திருக்கலாம் என்பதைக் கண்டுபிடித்ததாகக் கூறப்பட்டு உள்ளது. 1980 களில் அண்டார்டிகாவின் சீமோர் தீவில்  மீட்கப்பட்ட புதைபடிவங்கள் பெலகோர்னிதிட்கள் என அழைக்கபடும் பறவையின் புதைபடிவங்கள் அவை என அடையாளம் காணப்பட்டன.இரண்டு பறவைகளுக்கு சொந்தமான கால் எலும்பு மற்றும் பகுதி தாடை எலும்பு அடங்கிய புதைபடிவங்கள் காணப்பட்டன. பெலகோர்னிதிட்கள் "எலும்பு-பல்" கொண்ட பறவைகள் என்றும் அழைக்கப்பட்டன.

"இந்த அண்டார்டிக் புதைபடிவங்கள் இவை உலகின் மிகப்பெரிய பறக்கும் பறவைகளை மட்டுமல்ல, இதுவரை வாழ்ந்த மிகப் பெரிய பறவைகளையும் குறிக்கும்" என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. 

பாலியோண்டாலஜிஸ்ட் பீட்டர் க்ளோஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், கால் எலும்பு குறைந்தது 50 மில்லியன் ஆண்டுகள் பழமையானது என்று கண்டறிந்தனர், அதே நேரத்தில் தாடை எலும்பு சுமார் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையது.

"எங்கள் புதைபடிவ கண்டுபிடிப்பு, 5 முதல் 6 மீட்டர் இறக்கைகள் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது - கிட்டத்தட்ட 20 அடி - பறவைகள் டைனோசர்கள் அழிந்த பின்னர் ஒப்பீட்டளவில் விரைவாக உண்மையான பிரம்மாண்டமான அளவுக்கு பரிணாமம் அடைந்து மில்லியன் கணக்கான ஆண்டுகளாக கடல்களை ஆட்சி செய்தன என்பதைக் காட்டுகிறது என்று  கூறினார்.

எலும்பு-பல் பறவைகளின் புதைபடிவங்கள் உலகெங்கிலும் காணப்பட்டாலும், அண்டார்டிக் புதைபடிவங்கள் பழமையானவை என்றும் அவை ஆறு மில்லியன் ஆண்டுகளுக்குள் பறந்த  பறவைகள் வெவ்வேறு வடிவங்களில் பன்முகப்படுத்தப்பட்டிருக்கலாம் என்பதைக் குறிக்கிறது என்றும் சி.என்.என் தெரிவித்துள்ளது.

ஆய்வின்படி,  அண்டார்டிகா மிகவும் வித்தியாசமானது. அப்போது இப்பகுதி மிகவும் வெப்பமாக இருந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள், மேலும் நில பாலூட்டிகளின் தாயகமாக இதை கருதுகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. அத்துமீறி கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை விரட்டி அடித்த ரஷிய போர்க்கப்பல்
அத்துமீறி தங்களது கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க போர்க்கப்பலை ரஷிய போர்க்கப்பல் துரத்திச் சென்ற விரட்டித்ததாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. அமெரிக்க கடற்படை அதிகாரி தைவானுக்கு திடீர் பயணம்?
அமெரிக்க கடற்படை அதிகாரி, முன் அறிவிப்பு இன்றி தைவானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. போயிங் 737 மேக்ஸ் விமானங்கள்: 20 மாதங்களாக நீடித்த தடை முடிவுக்கு வந்தது
எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஆண்டு மார்ச் 10ம் தேதி விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். முன்னதாக இதே ரக விமானம் இந்தோனேசியாவில் 2018ம் ஆண்டு அக்டோபர் 29ம் தேதி விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
4. டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
5. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது
அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சத்வீதம் குறைந்து உள்ளது என அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.