உலக செய்திகள்

இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க போகும் இங்கிலாந்து நிபுணர்கள் கணிப்பு + "||" + UK economy feels the effects as Covid second wave hits critical stage

இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க போகும் இங்கிலாந்து நிபுணர்கள் கணிப்பு

இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க போகும் இங்கிலாந்து நிபுணர்கள் கணிப்பு
கொரோனாவால் இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
லண்டன்

கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு இங்கிலாந்தில் மேலும் 30 லட்சம்  பேர் வேலையிழக்க இருப்பதுடன், இதுவரை இல்லாத அளவுக்கு இங்கிலாந்து கடனில் மூழ்க இருப்பதாகவும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

இங்கிலாந்தில் இரண்டாவது ஊரடங்கு தொடர்பான அறிவிப்பு வெளியானதும், குளிர்காலத்தில் நிலைமை மோசமாக இருக்கப்போவதாக தொழில் செய்வோர் கணித்துள்ளதுடன், ஏற்கனவே அடிபட்டு மீண்டு எழ இருக்கும் பொருளாதாரத்திற்கு, அது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

பணிக்கால விடுமுறை முடிந்து மீண்டும் மக்கள் பணிக்கு திரும்பும் நேரத்தில், 30 லட்சம் பேருக்கு வேலை இருக்காது என அவர்கள் கணித்துள்ளனர். அதே நேரத்தில், வர்த்தகம் சரியாக நடக்காததாலும், பொருளாதார வீழ்ச்சியால் வரி வசூல் பாதிக்கப்படுவதாலும், அரசின் கடன் இதுவரை இல்லாத அளவில் 50000 கோடி பவுண்டுகளை எட்டலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். அத்துடன், இங்கிலாந்தில் இரட்டை மந்த் நிலை என்னும் ஒரு வகை பொருளாதார வீழ்ச்சியை அவர்கள் கணித்துள்ளார்கள்.

இரட்டை மந்த நிலை என்பது என்னவென்றால், ஒரு முறை வீழ்ச்சி அடைந்த பொருளாதாரம் மீண்டும் நல்ல நிலைமைக்கு வரத்துவங்கும்போது, அது மேலும் உயராமல் மீண்டும் வீழ்ச்சியை நோக்கி செல்வதாகும்.

இங்கிலாந்தில் அதுதான் நிகழப்போவதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.இங்கிலாந்தில் பொருளாதாரம், ஆண்டின் முதல் காலாண்டில் 2.5 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. இரண்டாவது காலாண்டில் 19.8 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது.மூன்றாவது காலாண்டில், கட்டுப்பாடுகள் நெகிழ்த்தப்பட்டு, தொழில்கள் மீண்டும் துவக்கப்பட்டதும் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சியடையத் தொடங்கியது,

அதாவது ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில்... அதனால், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இங்கிலாந்விது டுபட்டுவிடும் என்ற ஒரு நம்பிக்கை உருவானது.ஆனால், இப்போது மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட இருக்கும் நிலையில், ஆண்டின் நான்காவதும் கடைசியுமான காலாண்டில் மீண்டும் இங்கிலாந்து பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 % அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்
ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர் என ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2. கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர்
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.
3. இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் ; உலகில் மிக விரைவாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கம்
உலகில் மிக விரைவாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.
4. இந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்கிறது- அமெரிக்கா பாராட்டு
இந்தியா உண்மையான நண்பனாக நடந்து கொள்வதாக அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது
5. குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து- தமிழக அரசு அறிவிப்பு!
குடியரசு தினத்தன்று சென்னையில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் ரத்து என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.