தேசிய செய்திகள்

ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்க உறுதியாக உள்ளது - ராஜ்நாத் சிங் + "||" + India determined to protect its sovereignty amid aggression, says Rajnath

ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்க உறுதியாக உள்ளது - ராஜ்நாத் சிங்

ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்க உறுதியாக உள்ளது - ராஜ்நாத் சிங்
ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் இந்தியா தனது இறையாண்மையைப் பாதுகாக்க உறுதியாக உள்ளது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
புதுடெல்லி

சீனாவுடனான எல்லை மோதலுக்கு மத்தியில், பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் இன்று  கூறும் போது ஒருதலைப்பட்சம் மற்றும் ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்தியா தனது இறையாண்மையையும் பிராந்திய ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உறுதியாக உள்ளது என கூறினார். கிழக்கு லடாக் பகுதியில் மோதலை தவிர்க்க இரு நாடுகளுக்கும் இடையிலான எட்டாவது  சுற்று இராணுவப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக அவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

அடுத்த சுற்று கார்ப்ஸ்-கமாண்டர்-நிலை பேச்சுவார்த்தைகள் சுஷுல் துறையில் நாளை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எல்லை பதற்றங்களைத் தணிக்கும் முயற்சியில் இந்திய மற்றும் சீன இராணுவத் தளபதிகள் அக்டோபர் 12 ஆம் தேதி ஏழாவது முறை பேசுவார்த்தையை நடத்தி இருந்தனர். 

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் வைர விழா உரையின் போது  மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

இந்தியா அமைதியை விரும்பும் நாடு, ஆனால் அதன் எல்லைகளில் சவால்களை எதிர்கொண்டுள்ளது.வேறுபாடுகள் சர்ச்சையாக மாறாது என்று நாங்கள் நம்புகிறோம். உரையாடலின் மூலம் வேறுபாடுகளை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம். எங்கள் எல்லைகளில் அமைதி மற்றும் அமைதிக்காக இந்தியா கையெழுத்திட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் மற்றும் நெறிமுறைகளை நாங்கள் மதிக்கிறோம் என கூறினார். 


தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பாதுகாப்புக்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க முடியாது - மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியாவின் பாதுகாப்புக்காக மற்ற நாடுகளைச் சார்ந்து இருக்க முடியாது என மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்
2. எந்தவொரு வல்லரசும் நம் சுயமரியாதையை தீண்டினால்...தக்க பதிலடி, சீனாவுக்கு ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை
எந்தவொரு வல்லரசு நாடும் நம் சுயமரியாதையை தீண்டினால் ... தக்க பதிலடி கிடைக்கும் என சீனாவிற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்தின் வலுவான செய்தியை கூறி உள்ளார்.
3. சீன ஆத்திரமூட்டலுக்கு எதிராக நமது வீரர்கள் குறிப்பிடத்தக்க பொறுமையையும்,தைரியத்தையும் காட்டினர் பாதுகாப்ப அமைச்சர் பாராட்டு
சீன ஆத்திரமூட்டலுக்கு எதிராக நமது வீரர்கள் குறிப்பிடத்தக்க பொறுமையையும்,தைரியத்தையும் காட்டினர் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.