‘நீட்’ தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்க உள்ளதாக தகவல் + "||" + Information that free online training classes for the ‘NEET’ exam is about to start today
‘நீட்’ தேர்வுக்கான இலவச ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்க உள்ளதாக தகவல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் ‘நீட்’ தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் இன்று முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் இலவச நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அளிக்கப்பட்டன. நடப்பாண்டும் அதே நிறுவனம் தான் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை அளிக்க இருக்கிறது.
இந்த பயிற்சி வகுப்புகளில் சேருவதற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, 14 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கின்றனர். அவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் கடந்த 1-ந்தேதி முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்கள் அதிகம் பேர் விண்ணப்பித்த காரணத்தினால் அது தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் ஆன்லைன் மூலம் இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
நீட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 10 முக்கிய குற்றவாளிகளின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஆதார் ஆணையம் கைவிரித்து விட்டதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.
டாக்டராக வேண்டும் என்ற எனது கனவுக்கு ‘தினத்தந்தி’யின் கல்வி நிதி ஊக்கம் அளித்ததாக ‘நீட்’ தேர்வில் சாதனை படைத்த தேனி மாணவர் ஜீவித்குமார் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.