மாநில செய்திகள்

சென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-கமல்ஹாசன் + "||" + 3 shot dead in Chennai Kamal Haasan condemned

சென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-கமல்ஹாசன்

சென்னையில் 3 பேர் சுட்டுக் கொலை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது-கமல்ஹாசன்
தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து உள்ளார்.
சென்னை

சென்னையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த தலில் சந்த், மனைவி புஷ்பா, மகன் ஷீத்தல் ஆகியோர் சொத்து தகராறில் நேற்று மாலை துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பான குற்றவாளிகளைப் பிடிக்க 5 தனிப்படை காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

தலைநகரில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் 3 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. உள்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் அறிக்கைப் போரில் காட்டும் ஆர்வத்தை மக்களைக் காப்பதில் காட்ட வேண்டும். பழி போடும் அரசியலை நிறுத்தி விட்டு ஆயுதக் கலாச்சாரம் அடியோடு ஒழிக்கப்பட வழி தேடுங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது; ‘அப்பா நலமுடன் இருக்கிறார்’ கமல்ஹாசன் மகள்கள் அறிக்கை
கமல்ஹாசனுக்கு நடந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது என்றும், தற்போது அவர் நலமுடன் இருக்கிறார் என்றும் அவருடைய மகள்கள் தெரிவித்தனர்.
2. காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது; கமல்ஹாசன்
காலில் ஒரு சிறு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளதால் சில நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. மக்கள் நீதி மய்யத்துக்கு மீண்டும் கிடைத்த டார்ச் லைட் சின்னம் நன்றி தெரிவித்தார் கமல்ஹாசன்
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ள கட்சிகளுக்கு சமீபத்தில் சின்னங்களை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. சீமானின் நாம் தமிழர் கட்சி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. உள்ளிட்ட சில கட்சிகளுக்கு தமிழகத்தில் அவர்கள் கேட்ட சின்னம் கிடைத்தது.
4. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கீடு: கமல்ஹாசன் டுவிட்
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
5. தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டம்: சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன் கமல்ஹாசன் பேட்டி
தொழில்துறையை மேம்படுத்த 7 அம்ச திட்டங்கள் உள்ளதுடன், வருகிற சட்ட மன்ற தேர்தலில் நிச்சயம் போட்டியிட உள்ளதாக கோவையில் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.