மாநில செய்திகள்

அடுத்த 6 மணிநேரம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை + "||" + Heavy rain likely in 4 districts including Chennai for next 6 hours - Weather Center Warning

அடுத்த 6 மணிநேரம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த 6 மணிநேரம் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை
அடுத்த 6 மணிநேரத்திற்கு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை,

இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை முதல் வடதமிழகம் வரை நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையின் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், ஆந்திர கடலோர பகுதிகள், கேரளா மற்றும் லட்சத்தீவு கடற்கரை பகுதிகளில், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனையொட்டி அடுத்த 5 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், அடுத்த 6 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும், சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. புரெவி புயல் எதிரொலி; சென்னை - தூத்துக்குடி விமான சேவை ரத்து
புரெவி புயல் காரணமாக சென்னை தூத்துக்குடி விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-கேரளா அணிகள் இன்று மோதல்
இன்றைய ஐ.எஸ்.எல். கால்பந்து ஆட்டத்தில் சென்னை-கேரளா அணிகள் மோதுகின்றன.
3. ஐ.பி.எல். 2020: சென்னை அணிக்கு 173 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது கொல்கத்தா
சென்னைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 172 ரன்கள் குவித்தது.
4. ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: சென்னைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
5. ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 2.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு - மாநகராட்சி தகவல்
ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்ட நிலையில் சென்னையில் 2.7 சதவீதம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.