உலக செய்திகள்

துருக்கியில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு புதிய உச்சம்: ஒரே நாளில் 3,116 பேருக்கு கொரோனா + "||" + New peak in Turkey after April: Corona for 3,116 people in a single day

துருக்கியில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு புதிய உச்சம்: ஒரே நாளில் 3,116 பேருக்கு கொரோனா

துருக்கியில் ஏப்ரல் மாதத்திற்கு பிறகு புதிய உச்சம்: ஒரே நாளில் 3,116 பேருக்கு கொரோனா
துருக்கியில் கடந்த 24 ஏப்ரல் 24-க்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அங்காரா,

துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில்  3,116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக, அங்கு கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. 

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 24-க்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சமாக நேற்று 3,116 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,11,055 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,419 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 3,423 பேர் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியது
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 37.38 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.97 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.17 கோடியாக உயர்ந்துள்ளது
3. பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நாடுகளுக்கு வழங்கி இந்தியா உதவி செய்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.
4. சேலம் பிளஸ்-2 மாணவிக்கு கொரோனா: கோவையில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம்
சேலத்தில் பிளஸ்-2 மாணவி ஒருவருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் கோவை மாவட்டத்தில் மாணவர்களின் பாதுகாப்புக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
5. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9.93 கோடியாக உயர்வு
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7.13 கோடியாக உயர்ந்துள்ளது.