தேசிய செய்திகள்

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு + "||" + PM Modi to attend virtual summit of BRICS on Today

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு

பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்பு
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி காணொலி மூலம் இன்று நடைபெறுகிறது.
புதுடெல்லி, 

பிரிக்ஸ் நாடுகளின் 12-வது மாநாடு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ரஷியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா, சீனா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் பங்கேற்கின்றன. 

காணொலி காட்சி மூலம் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடியும், சீனா சார்பில் அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கும், ரஷியா சார்பில் அதிபர் விளாடிமிர் புதினும் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டில் கொரோனா தொற்று, பயங்கரவாதத்தை ஒடுக்குவது, சுகாதாரம், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.

இந்தியா- சீனா இடையே கடந்த 6 மாதங்களுக்கு மேலாக கிழக்கு லடாக்கில் எல்லை பிரச்சினை இருந்து வரும் நிலையில், இந்த மாநாடு நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்
டெல்லியில் இன்று மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
2. புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடக்கம்
புதுச்சேரியில் இன்று முதல் பள்ளிகளில் முழு நேர வகுப்புகள் தொடங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
3. தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா பாதிப்பு - சுகாதாரத்துறை தகவல்
தமிழகத்தில் இன்று புதிதாக 474 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
4. பிரதமர் மோடியை பாராட்டிய காங்கிரஸ் மூத்த தலைவர்!
பிரதமர் மோடி கடந்த காலத்தில் டீ விற்றது பற்றி வெளிப்படையாக பேசுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் பாராட்டி உள்ளார்.
5. மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி
மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.