அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4.4 சத்வீதம் குறைந்து உள்ளது என அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
வாஷிங்டன்
கொரோனா பரவலைத் தொடர்ந்து அமெரிக்க கல்வி நிறுவனங்களில், வரலாறு காணாத அளவிற்கு வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கை வெகுவாக சரிந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வறிக்கையில், அமெரிக்காவில் தங்கி படிப்பது அல்லது ஆன்லைன் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை 42 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இருந்து மட்டும் 4.4 சதவீதம் அளவிற்கு மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், இந்த சரிவில் இருந்து மீள முடியும் என, சர்வதேச கல்வி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மாணவர்கள் சேர்க்கையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைத்துள்ளதாக 90% நிறுவனங்கள் தெரிவித்துள்ளன,
ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர் என ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.