உலக செய்திகள்

டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை + "||" + Biden says more people may die if Trump doesnt cooperate with transition process

டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை

டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் ஜோ பைடன் எச்சரிக்கை
டொனால்டு டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்காவிட்டால் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரிக்கும் என புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
வாஷிங்டன்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் 2-வது அலை தாக்கத் தொடங்கியுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதுவரை அமெரிக்காவில் கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு கோடியைக் தாண்டி உள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து  அதிபர் டடிரம்ப் நிர்வாகத்தின் மீது புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஜோ பைடன் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.

டெலாவேரில் உள்ள வில்மிங்டன் நகரில் ஜோ பைடன்  நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர்கூறியதாவது:-

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அதிபர் டிரம்ப் எங்களுடன் ஒத்துழைக்கா விட்டால், இன்னும் அதிகமான மக்கள் உயிரிழக்க நேரிடும். 

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் நானும், அதிபர் டிரம்ப்பும் ஒத்துழைத்துச் செயல்படாவிட்டால், அதிகமான அமெரிக்கர்கள் உயிரிழக்க நேரிடும்.

தடுப்பு மருந்து மிகவும் முக்கியமானது. தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவரை கொரோனாவில் தப்பிக்க வாய்ப்பு குறைவுதான். ஆனால், தடுப்பூசி கண்டுபிடித்து நடைமுறைக்கு வந்துவிட்டால், மக்கள் எவ்வாறு தடுப்பூசியைப் பெறுவார்கள், 30 கோடி அமெரிக்க மக்களுக்கும் எவ்வாறு வழங்கப் போகிறீர்கள் எனும் திட்டம் ஏதும் இருக்கிறதா? அதற்காக அரசு என்ன திட்டத்தை வைத்துள்ளது?

மக்களுக்குத் தடுப்பூசி போடுதல் என்பது மிகப்பெரிய பெரிய பணி. முன்னுரிமை அடிப்படையில்தான் மக்களுக்குக் கொரோனா தடுப்பூசியை வழங்க வேண்டும். உலக சுகாதார அமைப்புடன் ஒத்துழைத்துதான் இந்தப் பணியை நம்மால் செய்ய முடியும்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி தீவிரமான வேகத்தில் செல்கிறது என்று டிரம்ப் நிர்வாகம் தெரிவிக்கிறது. தடுப்பு மருந்து நமது கைக்குக் கிடைத்தால் மட்டும் போதாது. அதை எப்படி மக்களுக்கு வழங்கப்போகிறோம். 2021-ம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதிவரை காத்திருந்தால், எங்களின் திட்டம் தொடங்கிவிடும். இன்னும் ஒன்றரை மாதங்கள் காத்திருக்க வேண்டும்.

இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமானது, அதிபர் டிரம்ப் எங்களுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களிடம் கொரோனா தடுப்பு மருந்தை மக்களுக்கு எவ்வாறு வழங்குவது, ஒவ்வொருவருக்கும் எப்படி வழங்குவது, தொழிலாளர்கள், குடியரசுக் கட்சியினர், ஜனநாயகக் கட்சியனர் அனைவருக்கும் எவ்வாறு வழங்குவது எனச் செயல்திட்டம் இருக்கிறது.

நான் உங்களிடம் கூறுவது என்னவென்றால், நான் உங்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒத்துழைத்துச் செயல்பட வேண்டும்' என கூறி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 % அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்துள்ளனர்
ஊரடங்கில் இந்திய பணக்காரர்களின் செல்வம் 35 சதவீதம் அதிகரித்துள்ளது; ஆனால் கோடிகணக்கானவர்கள் வேலை இழந்து உள்ளனர் என ஆக்ஸ்பாம் என்கிற லாப நோக்கற்ற அமைப்பு கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்துச் சமத்துவமில்லா வைரஸ் என்னும் பெயரில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2. கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் - அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர்
கொரோனா கிருமி தொடா்ந்து உருமாறிக்கொண்டே இருக்கும், அதை எதிா்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும் என அமெரிக்காவின் மருத்துவத் துறை தலைவர் விவேக் மூா்த்தி கூறி உள்ளார்.
3. தைவான் மீதான ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதியை அச்சுறுத்துகிறது; சீனாவின் நடவடிக்கை குறித்து அமெரிக்கா கவலை
தைவான் மீதான சீன ராணுவ அழுத்தம் பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதாக அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
4. பல நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உதவி; இந்தியாவுக்கு அமெரிக்கா பாராட்டு
கொரோனா தடுப்பூசி மருந்துகளை பல நாடுகளுக்கு வழங்கி இந்தியா உதவி செய்து வருவதற்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்து உள்ளது.
5. இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் ; உலகில் மிக விரைவாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கம்
உலகில் மிக விரைவாக நடைபெற்று வரும் தடுப்பூசி இயக்கம் இந்தியாவில் 6 நாட்களில் 10 லட்சத்துக்கும் மேல் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன.