தேசிய செய்திகள்

ஜோபைடன் தலைமையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் விரிவடையும் - ஜெய்சங்கர் + "||" + India-US relations to expand further, Joe Biden no stranger: S Jaishankar

ஜோபைடன் தலைமையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் விரிவடையும் - ஜெய்சங்கர்

ஜோபைடன் தலைமையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் விரிவடையும் -  ஜெய்சங்கர்
ஜோபைடன் தலைமையில் இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் விரிவடையும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

கேட்வே ஹவுஸ் ஒருங்கிணைத்த இணையக் கருத்தரங்கில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

ஜோ பைடன் துணை அதிபராக இருந்தபோதே இந்தியாவுடன் நல்ல நட்புறவில் இருந்தார். ஒபாமா ஆட்சியின்போது நான் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதராக இருந்தேன். அப்போது, அமெரிக்க செனட்டின் வெளியுறவுத் தொடர்புக் குழுவின் ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதியாக, தலைவராக இருந்த ஜோ பைடன் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

இந்திய - அமெரிக்க உறவு ஒரு புதிய மாற்றத்தை எதிர்கொண்ட மிக முக்கியமான தருணத்தில் அவர் நம் நாட்டுடன் நல்லுறவில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் இந்தியாவுக்கோ, இந்திய - அமெரிக்க நல்லுறவைப் பேணுவதிலோ ஜோ பைடன் அந்நியர்  கிடையாது.

அமெரிக்க அரசியல் சற்று வித்தியாசமானது. அங்கு நாம் ஆட்சியில் இருப்பவர்களுடன் மட்டும் உறவைப் வளர்த்தால் போதாது. அந்நாட்டு நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் சற்று கூர்ந்து கவனிக்க வேண்டும்.

இருப்பினும் பைடன் தலைமையில் இந்தியாவின் நட்புறவில் எந்த சிக்கல் இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: இந்தியா-ஜப்பான் இடையே இணைய பாதுகாப்பு ஒப்பந்தம்
இந்தியா-ஜப்பான் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், இணைய பாதுகாப்பு ஒப்பந்த வரைவு அறிக்கை இறுதி செய்யப்பட்டது.
2. 1962- க்கு பிறகு மிகவும் தீவிரமான சூழல் நிலவுகிறது ; லடாக் விவகாரம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் கருத்து
1962-ஆம் ஆண்டு இந்தியா- சீனா இடையே நடைபெற்ற போருக்கு பிறகு தற்போதுதான் எல்லையில் இந்த அளவுக்கு பதற்றம் அதிகரித்துள்ளதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.