தேசிய செய்திகள்

நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் இருக்கிறது - ராகுல்காந்தி விமர்சனம் + "||" + Rahul gandhi attacks modi government over gdp and banks

நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் இருக்கிறது - ராகுல்காந்தி விமர்சனம்

நாட்டில் பொருளாதார வளர்ச்சி சிக்கலில் இருக்கிறது - ராகுல்காந்தி விமர்சனம்
இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இதுவரை உச்சத்தில் இருந்தது கிடையாது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி,

ராகுல்காந்தி இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'நாட்டில் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை இந்த அளவுக்கு உச்சத்தில் இருந்ததில்லை. பணவீக்கமும் இதுபோன்று கட்டுக்கு அடங்காமல் இருந்தது இல்லை.

நாட்டு மக்களின் நம்பிக்கை அன்றாடம் சிதைந்து கொண்டிருக்கிறது. சமூக நீதி நசுக்கப்படுகிறது. வங்கிகள் பிரச்சினையில் சிக்கியுள்ளன. நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சியும் சிக்கலில் இருக்கிறது. வளர்ச்சியா? வீழ்ச்சியா? என்ன நடக்கிறது என்று தெரியவில்லை என பதிவிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றைக் குறிப்பிட்டு கடந்த சில மாதங்களாகவே ராகுல் காந்தி, மத்திய அரசை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த முடியுமா? ராகுல்காந்தி கேள்வி
சீன ராணுவம் இந்தியாவுக்குள் நுழையவில்லை என்பதை மத்திய அரசு உறுதிப்படுத்த முடியுமா? என ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.