மாநில செய்திகள்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை மையம் + "||" + Moderate rain is likely in Tamil Nadu and Pondicherry for the next 24 hours - Chennai Meteorological Center

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,

மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும்.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். 

தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மிகப் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்குச் செல்லவேண்டாம்.

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. பரமக்குடியில் 13 செ.மீ., பாபநாசத்தில் 12 செ.மீ., தேவக்கோட்டையில் 10 செ.மீ., கொடைக்கானல், திருப்பத்தூர், அரிமளம், சிவகாசி, காரைக்குடி, திருச்செந்தூரில் தலா 9 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.