தேசிய செய்திகள்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கா? துணை முதல்வர் மனிஷ் சிசோடியா விளக்கம் + "||" + No plan for lockdown in Delhi, says Deputy CM Manish Sisodia as Covid-19 cases surge

டெல்லியில் மீண்டும் ஊரடங்கா? துணை முதல்வர் மனிஷ் சிசோடியா விளக்கம்

டெல்லியில் மீண்டும் ஊரடங்கா? துணை முதல்வர்  மனிஷ் சிசோடியா விளக்கம்
டெல்லியில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா தொற்று உச்சத்தில் உள்ளது. இதனால் பல்வேறு கட்டுப்பாடுகளை டெல்லி அரசு மேற்கொண்டுள்ளது.  இனி திருமண வைபவங்களில் 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.  இதுநாள் வரை 200 பேர் வரை திருமண நிகழ்வுகளில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இதனால் டெல்லியில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் பரவத் தொடங்கியது. இந்த நிலையில், செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா கூறியதாவது:- 

டெல்லியில் மீண்டும்  ஊரடங்கை  அமல்படுத்தும் நோக்கம் அரசுக்கு இல்லை. கொரோனா பாதிப்பிற்கு எதிரான போராட்டத்தில் ஊரடங்கு மட்டுமே தீர்வு அல்ல என்று நாங்கள் நம்புகிறோம். சிறந்த மருத்துவமனை மேலாண்மை மற்றும் சிறந்த மருத்துவ வசதிகளே தீர்வுகளாக இருக்க முடியும். அந்த வகையில் டெல்லி  அரசு மருத்துவ வசதிகளை சிறப்பாக வழங்கி வருகிறது" என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 4,067 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாளை தி.மு.க. கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக 5-ந்தேதி(நாளை) கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
3. டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
டெல்லியில் இன்று 3,734 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை: வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை
டெல்லியில் விவசாயிகளுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக, வேளாண் மந்திரியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
5. டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது - சித்தராமையா கருத்து
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் நியாயமானது என்று கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கருத்து தெரிவித்துள்ளார்.