தேசிய செய்திகள்

டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்வு: உ.பி எல்லையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு + "||" + Random COVID testing at Delhi-Noida border from today

டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்வு: உ.பி எல்லையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்வு: உ.பி எல்லையில் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிப்பு
டெல்லியில் கொரோனா பாதிப்பு உயர்ந்துள்ளதன் காரணமாக உத்தர பிரதேச எல்லையில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

டெல்லியில் கொரோனா பரவல் மூன்றாவது முறையாக மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதன் எதிரொலியாக டெல்லியின் எல்லைப் பகுதியான நொய்டாவில் கொரோனா பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி - நொய்டா எல்லையில் கொரோனா பரிரோதனை  ரேண்டம் முறையில் செய்யப்படுகிறது.   

இது தொடர்பாக பேசிய கெளதம புத்தா நகர் ஆட்சியர் சுஹாஸ், ''கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எல்லைப் பகுதிகளில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநில எல்லைப் பகுதிகள் திறக்கப்பட்டுள்ளன. 

எந்தவித கட்டுப்பாடுகளும் தற்போது இல்லை. அதனால் எல்லைப் பகுதிகளைக் கடந்து வரும் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசோதனை முகாம்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கப்படும்” என்றார்.