தேசிய செய்திகள்

தவறான வரைபடம் : இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியது டுவிட்டர் + "||" + Twitter apologises in writing for showing Ladakh in China

தவறான வரைபடம் : இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியது டுவிட்டர்

தவறான வரைபடம் : இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக மன்னிப்பு கோரியது டுவிட்டர்
லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது.
புதுடெல்லி,

இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான லடாக்கினை சீனாவின் பகுதியாக சித்தரித்து தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் பிரபல சமூக வலைத்தளமான  டுவிட்டர் நிறுவனம் இந்திய அரசிடம் மன்னிப்புக் கோரியது.

 பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாட்சி லேஹி தலைமையிலான எம்.பிக்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவானது, டுவிட்டரின்  தவறான வரைபடத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. அதோடு, டுவிட்டரின் இந்த செயல் இந்திய இறையாண்மைக்கு எதிரானது எனவும் கிரிமினல் குற்றத்திற்கு ஒப்பானது எனவும் கடுமையாக சாடியிருந்தது. 

அதன் தொடர்ச்சியாக டுவிட்டா் நிறுவன தலைமைச் செயல் அதிகாரியான ஜாக் டோா்ஸிக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை செயலா் அஜய் சாஹ்னி  கடிதமும் எழுதியிருந்தார்.  இந்நிலையில் தவறான இந்திய வரைபடம் வெளியிட்ட விவகாரத்தில் டுவிட்டர் நிறுவனம்  இன்று இந்திய அரசிடம் எழுத்துப் பூர்வமாக மன்னிப்புக் கோரியது. 

நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் மன்னிப்புக் கோரப்பட்டுள்ளதுடன், இந்த தவறினை இம்மாத இறுதிக்குள் சரிசெய்து விடுவதாகவும் அந்நிறுவனம் உறுதியளித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு -இறப்புகளில் முழுமையான தகவலை மூடிமறைத்த சீனா
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இறப்பு தொடர்பில் சீனா முழுமையான தகவலை வெளியிடாமல் மூடிமறைத்துள்ள சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
2. 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கும் சீனா
தள்ளுபடி விலையை இந்தியாவில் வழங்குவதால் சீனா 30 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இந்திய அரிசியை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது என இந்திய தொழில்துறை அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்து உள்ளனர்.
3. சீனாவில் 3 நகரங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு : லட்சக்கணக்கானோருக்கு பரிசோதனை
உலகில் முதன் முதலாக தொற்று பாதிப்பு வெளிப்பட்ட சீனாவில், இதுவரை 86 ஆயிரம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. பூட்டானிய எல்லைக்குள் ஊடுருவி இந்தியாவின் டோக்லாமிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் சீனா- செயற்கைகோள் படங்கள்
சீனா பூட்டானிய எல்லைக்குள் டோக்லாம் பீடபூமியின் கிழக்கு பகுதியில் இரண்டு கிலோமீட்டர் ஊடுருவி சுமார் 9 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு சாலையைக் கட்டியுள்ளது என உயர் தெளிவுத்திறன் கொண்ட செயற்கைக்கோள் படங்கள் காட்டுகிறது.
5. கொரோனாவை தடுக்க அவசர பயன்பாடாக சீனாவில் 10 லட்சம் பேருக்கு தடுப்பூசி
சீனாவில் கொரோனாவை தடுப்பதற்காக, அவசர பயன்பாடாக சைனோபார்ம் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை கிட்டத்தட்ட 10 லட்சம் பேருக்கு செலுத்தி உள்ளனர்.