உலக செய்திகள்

ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 20,985 பேருக்கு தொற்று உறுதி + "||" + Russia registers 20,985 COVID-19 cases in past 24 hours

ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 20,985 பேருக்கு தொற்று உறுதி

ரஷ்யாவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இன்று மேலும் 20,985 பேருக்கு தொற்று உறுதி
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 19.91 லட்சத்தைக் கடந்துள்ளது.
மாஸ்கோ,

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதுவரை 5.61 கோடிக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 13.48 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது.
 
ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 20,985 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 19,91,998 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றுக்கு ஒரேநாளில் அதிக அளவாக மேலும் 456 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 34 ஆயிரத்து 387 ஆக உயர்ந்துள்ளது.

ரஷ்யாவில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 15,01,083 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 4,56,528 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ரஷ்யாவில் ஒரேநாளில் அதிக அளவாக புதிதாக 28,145 பேருக்கு கொரோனா பாதிப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 23.7 லட்சத்தைக் கடந்துள்ளது.
2. ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23.4 லட்சமாக அதிகரிப்பு
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 25,345 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் மேலும் 459 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 22.6 லட்சத்தைக் கடந்துள்ளது.
4. ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் மருத்துவ தரவுகளை சமர்பிக்க உலக சுகாதார மையம் அறிவுறுத்தல்
ரஷ்யாவின் ‘ஸ்பூட்னிக்’ தடுப்பூசியின் உற்பத்தி மற்றும் மருத்துவ தரவுகள் குறித்து தெரிவிக்குமாறு மருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
5. ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலி: புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
ரஷ்யாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 491 பேர் பலியாகினர். புதிதாக 24,326 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.