சினிமா செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் 3-வது முறையாக சம்மன் + "||" + Kangana Ranaut, Sister Summoned By Mumbai Cops For Third Time

நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் 3-வது முறையாக சம்மன்

நடிகை கங்கனா ரணாவத், அவரது சகோதரிக்கு மும்பை போலீசார் 3-வது முறையாக சம்மன்
நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ஆகியோருக்கு மும்பை போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.
மும்பை, 

வெவ்வேறு மதத்தினர் இடையே பகையை தூண்டும் வகையில் பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் டுவிட்டரில் பதிவிட்டு இருந்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திரைப்பட காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பாந்திரா போலீசார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்திரா போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர். அதன்படி நடிகை கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ந் தேதியும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மத மோதலை தூண்டும் கருத்து நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு - போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவு
நடிகை கங்கனா ரணாவத் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த போலீசாருக்கு மும்பை கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடிக்க நீதிமன்றம் தடை
நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
3. நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதி இடிப்பு - மும்பை மாநகராட்சி நடவடிக்கை
சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறி மும்பையில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் வீட்டின் ஒரு பகுதியை மாநகராட்சி நிர்வாகம் இடித்தது.
4. நடிகை கங்கனா ரணாவத் பங்களாவில் நோட்டீஸ் -மும்பை மாநகராட்சி நடவடிக்கையால் பரபரப்பு
நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசி இருந்தார்.
5. மும்பையை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பு வழங்குவதா? மராட்டிய மந்திரிகள் எதிர்ப்பு
மும்பையை விமர்சித்த நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாதுகாப்பு வழங்கியதற்கு மராட்டிய மந்திரிகள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.