மாநில செய்திகள்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல் + "||" + Need to cancel entrance exams for medical courses - Vaiko insists

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் - வைகோ வலியுறுத்தல்
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, 

மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ தேர்வை கட்டாயமாக வலிந்து திணித்த மத்திய பா.ஜ.க. அரசு அதற்கு கூறிய காரணம், ‘நாடு முழுவதும் வெவ்வேறு நுழைவுத்தேர்வுகள் நடத்துவதால் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது என்பதால் அந்த சுமையை குறைக்கிறோம்’ என்று தெரிவித்தது. 

ஆனால் எய்ம்ஸ், ஜிப்மர் உள்பட மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 11 மருத்துவ கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு தனி நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த 11 மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு பொதுவான ‘நீட்’ தேர்வு பொருந்தாது. எனவே தேவை இல்லை என்று முடிவெடுத்துள்ள மத்திய அரசு, மாநிலங்களில் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு மட்டும் ‘நீட்’ நடத்துவது ஏன்?

மத்திய அரசின் மருத்துவ கல்லூரிகள் மட்டும்தான் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தவையா? தமிழகத்தில் 355 ஆண்டுகளாக இயங்கி வரும் எம்.எம்.சி. முக்கியத்துவம் அற்றதா? மத்திய பா.ஜ.க. அரசின் அளவுகோல் என்ன? எனவே இனி மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ‘நீட்’ தேர்வையே ரத்து செய்ய வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
மருத்துவ படிப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என்று மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
2. மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின்
மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இட ஒதுக்கீட்டை அ.தி.மு.க. அரசு மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. மருத்துவப் படிப்பு: அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % ஒதுக்கீடு மசோதா கடந்து வந்த பாதை...
அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு மாணவா் சோ்க்கையில் 7.5 % ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கினார்.
4. மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு: இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓ.பி.சி. பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு நடைமுறைப்படுத்த முடியாது என சுப்ரீம்கோர்ட்டில் மத்தியஅரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
5. மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீடு: இந்த ஆண்டு வழங்க முடியாது - மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டம்
மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை இந்த ஆண்டு வழங்க முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.