உலக செய்திகள்

ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு? + "||" + Indian Americans Vivek Murthy, Arun Majumdar among likely in Biden’s Cabinet

ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு?

ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்பு?
அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடனின் அமைச்சரவையில் 2 இந்தியர்கள் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வாஷிங்டன், 

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தலைமையில் அமையவிருக்கும் புதிய அமைச்சரவையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் விவேக் மூர்த்தி மற்றும் பல்கலைக்கழக பேராசிரியர் அருண் மஜூம்தார் ஆகியோர் இடம் பெறுவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதில் விவேக் மூர்த்தி தற்போது ஜோ பைடனின் கொரோனா தடுப்பு ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ளார். அவர் ஜோ பைடனால் சுகாதாரம் மற்றும் மனித வளத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியரும், முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவால் 2009-ல் எரிசக்தி தொடர்பான நவீன ஆராய்ச்சி திட்டங்கள் அமைப்பின் நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டவருமான மஜூம்தார், எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் டாக்டர் விவேக் மூர்த்தி, ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது கொரோனா மற்றும் சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் ஜோ பைடனின் முக்கிய ஆலோசகராக விளங்கியுள்ளார். அதேபோல் மஜூம்தார் ஜோ பைடனுக்கு எரிசக்தி தொடர்பான விவகாரங்களில் ஆலோசனைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

1. செல்ல பிராணியுடன் விளையாடிய போது விபரீதம்: அதிபராக பதவி ஏற்க உள்ள ஜோ பைடனுக்கு காலில் காயம்
அமெரிக்க அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் தனது செல்ல நாயுடன் விளையாடிய போது வலது காலில் லேசான காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்ற சம்மதித்த டொனால்டு டிரம்ப்
ஜோ பைடனுக்கு ஆட்சி அதிகாரத்தை மாற்றுவதற்கு டொனால்டு டிரம்ப் சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
3. ஜோ பைடன் பலவீனமானவர்; போர் குறித்தும் பரிசீலிக்கலாம் : சீன அரசு ஆலோசகர் எச்சரிக்கை
ஜோ பைடன் ஆட்சிக்கு வந்ததும், அமெரிக்காவுடனான உறவுகள் தானாகவே மேம்படும் என்ற மாயையை சீனா கைவிட வேண்டும் என அரசு ஆலோசகர் ஒருவர் கூறி உள்ளார்.
4. ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம்
ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை முடிவு இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
5. ஜோ பைடன் அரிசோனா - ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றினார்; வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்வு
ஜோ பைடன் அரிசோனா மற்றும் ஜார்ஜியா மாநிலங்களை கைப்பற்றி உள்ளார். அவரது வாக்கு எண்ணிக்கை 306 ஆக உயர்ந்தது. டிரம்ப் 232 வாக்கு எண்ணிக்கையில் உள்ளார்.