தேசிய செய்திகள்

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார் + "||" + PM Modi to inaugurate Bengaluru Tech Summit today

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
பெங்களூரு, 

23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக கர்நாடக துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில், “23-வது பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு-கண்காட்சி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது. 

3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை இன்று காலை 10 மணிக்கு பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதில் ஆஸ்திரேலிய பிரதமர், சுவிட்சர்லாந்து துணை அதிபர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.

இதில் முதல்-மந்திரி எடியூரப்பா, தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள். இதற்கு முன்பு நடைபெற்ற 22 தொழில்நுட்ப மாநாடுகளில் அனைவரும் நேரில் கலந்து கொண்டனர். ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக அனைத்தும் காணொலி காட்சி மூலம் நடக்கிறது. 25-க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த கண்காட்சியை மிகுந்த எதிர்பார்ப்புடன் உற்று நோக்குகின்றன.

100-க்கும் அதிகமான புதிய தொழில்கள், சுமார் 4,000 தொழில் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் 70-க்கும் மேற்பட்ட கருத்தரங்குகள் நடக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை இந்த கண்காட்சியில் அரங்குகளை அமைத்து வெளிப்படுத்துகின்றன. இந்த கண்காட்சியின்போது, பிற நாடுகளுடன் கர்நாடகம் 7 ஒப்பந்தங்களில் கையெழுத்திட முடிவு செய்துள்ளது” என்று அவர் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

1. பெங்களூருவில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து
பெங்களூரு பாபுஜி நகரில் உள்ள ரசாயண தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
2. பெங்களூருவில் விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழை: சாலைகளில் வெள்ளம்; வாகன ஓட்டிகள் கடும் அவதி
பெங்களூருவில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.
3. பெங்களூரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பு கண்டுபிடிப்பு;ஈராக் - சிரியாவிலிருந்து திரும்பிய 14 பேர் கைது
பெங்களூரில் செயல்பட்டு வந்த பயங்கரவாத அமைப்பை தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்தது. ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து திரும்பி வந்த 14 ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
4. ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் அறிமுகம்
கூட்ட நெரிசலை தடுக்கும் நடவடிக்கையாக, ‘கியூ-ஆர்’ கோடை பயன்படுத்தி நடைமேடை டிக்கெட் எடுக்கும் வசதி பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
5. பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறதா? - தேஜஸ்வி சூர்யா எம்.பி.க்கு டி.கே.சிவக்குமார் கண்டனம்
பெங்களூரு பயங்கரவாதிகளின் மையமாக திகழ்கிறதா என்று தேஜஸ்வி சூர்யா எம்.பி கருத்துக்கு கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.