தேசிய செய்திகள்

நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் + "||" + Mamata Banerjee writes to PM Modi to declare Netaji's birthday as national holiday

நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்

நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம்
நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
கொல்கத்தா, 

நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள், 2022 ஜனவரி 23-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள். வங்காளத்தின் மாபெரும் மகன்களில் அவர் ஒருவர். அவர் ஒரு தேசிய ஹீரோ. இந்திய சுதந்திர இயக்கத்தின் சின்னம். அவர் எல்லா தலைமுறையினருக்குமான உத்வேகம். அவரது அயராத தலைமையின்கீழ், இந்திய தேசிய ராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்கள், தாய்த்திருநாட்டுக்காக மிக உன்னதமான தியாகங்களை செய்தனர். அவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேதாஜியின் பிறந்த நாளை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும்” என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.