தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45,576 பேருக்கு கொரோனா தொற்று + "||" + With 45,576 new COVID19 infections, India's total cases rise to 89,58,484. With 585 new deaths,in last 24 hrs.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45,576 பேருக்கு கொரோனா தொற்று

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 45,576 பேருக்கு கொரோனா தொற்று
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 576 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 89,58,484 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 585 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,31,578 ஆக உயர்ந்துள்ளது. 

இந்தியாவில் இன்று ஒரே நாளில் 48,493 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 83,83,603 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 4,43,303 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 12 கோடியே 85 லட்சத்து 08 ஆயிரத்து 389 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒருநாளில் மட்டும் 10,28,203 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்க மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு
இந்தியாவுக்கு ‘பைசர்’ தடுப்பூசி வழங்குவது தொடர்பாக, மத்திய அரசுடன் மருந்து நிறுவனம் பேச முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. கேரளாவில் கொரோனா பாதிப்பு: மேலும் 5,376 பேருக்கு தொற்று உறுதி; 31 பேர் பலி
கேரளாவில் இன்று மேலும் 5,376 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
3. மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று புதிதாக 1,450 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. மேற்கு வங்காளத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு: இன்று புதிதாக 3,246 பேருக்கு தொற்று உறுதி
மேற்கு வங்காளத்தில் இன்று மேலும் 3,246 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
5. இந்தியாவில் கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைவு
இந்தியாவில் 132 நாட்களுக்கு பிறகு, கொரோனாவுக்கான சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4.28 லட்சமாக குறைந்துள்ளது.