தேசிய செய்திகள்

அரியானாவில் 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி + "||" + 11 school students, 8 teachers test positive for COVID-19 in Haryana's Jind

அரியானாவில் 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி

அரியானாவில் 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி
அரியானா மாநிலத்தில் பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியான,

உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று  வேகமாக பரவியது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதோடு பள்ளி கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. நோய்  பாதிப்பை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே கொரோனா பாதிப்பு குறைந்த மாநிலங்களில் மாநில அரசுகளில் விருப்பத்துக்கேற்ப பள்ளி கல்லூரிகளை திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 

இதையடுத்து அரியானாவில் சில நாட்களுக்கு முன்னர் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. தற்போது அங்கு பண்டிகை காலம் முடிந்து மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு வரத் தொடங்கி உள்ளனர். 

இந்நிலையில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள் பள்ளி ஒன்றில் பயிலும் 11 மாணவர்களுக்கும், 8 ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ரேவாரியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இதனையடுத்து மாநிலம் முழுவதும் பள்ளிகளில் கொரோனா பரிசோதனையை அதிகரிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அரியானா மாநில ஆளுநருக்கு கொரோனா பாதிப்பு
அரியானா மாநில ஆளுநர் சத்யதேவ் நாராயணன் ஆர்யா கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
2. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50% ஒதுக்கீடு; அரியானா சட்டசபையில் மசோதா
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதட ஒதுக்கீடு; உறுப்பினர்களை திரும்ப வகைசெய்யும் புதிய பஞ்சாயத்து ராஜ் (இரண்டாம் திருத்தம்) மசோதாவை அரியானா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
3. அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியானாவில் இன்று மேலும் 1,698 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. ஆச்சரியம் ஆனால் உண்மை...குழந்தை மீது ஏறிய சரக்கு ரெயில்.. காயமின்றி உயிர் தப்பிய சம்பவம்
அரியானாவில் சரக்கு ரெயில் சிறுவன் மீது ஏறி சிறுகாயமின்றி தப்பிய அச்சரிய சம்பவம் ஒன்று நிழந்து உள்ளது.
5. அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
அரியானாவில் இன்று மேலும் 2,388 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.